அரியலூர் புதிய மதுபான கடை திறப்பதை கைவிட கோரி பாமக மனு.

6பார்த்தது
அரியலூர் மாவட்டம் தத்தனூர் ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் அரசு மதுபான கடை அமைக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பாமகவினர் தெரிவித்துள்ளனர். எனவே, அப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர் கங்கா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமொழி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி