அரியலூர்: வாகனங்களுக்கு ஒளிரும் பட்டை ஒட்டிய போலீசார்

315பார்த்தது
அரியலூர்: வாகனங்களுக்கு ஒளிரும் பட்டை ஒட்டிய போலீசார்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் பகுதியில் வாகன விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் போலீசார் வாகனங்களின் பின்புறம் ஒளிரும் பட்டைகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் லாரிகள், வேன்கள், பேருந்துகள் போன்ற வாகனங்களில் இந்தப் பட்டைகள் ஒட்டப்பட்டன. இதன் மூலம் இரவு நேரங்களில் வாகனங்கள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, விபத்துகள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி