அரியலூர்: காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்

71பார்த்தது
அரியலூர்: காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தன்னார்வ இரத்ததான முகாம்- "உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம்" அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கிக்கு அவ்வப்போது அரியலூர் காவல்துறையினர் சார்பில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது. இன்று 05.07.2025 அரியலூர் மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் I.P.S., அவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தன்னார்வ இரத்ததான முகாமில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் இரத்த தானம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி