பொன்பரப்பி மகா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் விழா கோலாகலம்

444பார்த்தது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பியில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் மரிக்கொழுந்து, மல்லி, முல்லை உள்ளிட்ட பல்வேறு மலர்களை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழா நிறைவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி