அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை, 18.11.2025 செவ்வாய்க்கிழமை அன்று தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப. , இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.