அரியலூர் மாவட்டத்தில், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும் 22.05.2026 அன்று வெள்ளிக்கிழமை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஒரு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியின் அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.