மாசி மகத்தை முன்னிட்டு, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பழக்கம் இன்று நடைமுறையில் உள்ளது. அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் கொள்ளிட கரையோரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திரண்டனர். வாழை இலையில் பச்சரிசி, பல்வேறு காய்கறிகள் படைத்து, மந்திரங்கள் முழங்க திதி கொடுத்தனர்.