அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 299 மனுக்கள்

426பார்த்தது
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 299 மனுக்கள்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 299 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி