அரியலூர் தா. பழூர் அரசு பள்ளி மற்றும் மாணவியர் விடுதிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வி.சி.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அரசு விதிமுறைப்படி மூட வேண்டிய மூன்று கடைகளில் இரண்டு மட்டும் மூடப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு கடையை மூடாததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால்
போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.