அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் நடந்துவரும் மயான கொட்டகை கட்டுமானப் பணிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால், இப்பணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் செந்துறை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தரமான மயான கொட்டகை அமைக்க உத்தரவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் தாமதமாவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.