அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.