அரியலூர் மாவட்டத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.