அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைபிரியாள் கிராமத்தில் மூன்று மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர், மின்விநியோகம், சுகாதாரம், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய பெண்கள், அதிகாரிகளை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.