அரியலூர் மாவட்டம் தட்டான்சாவடி கிராமத்தில் செல்வி என்பவரது வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பொருட்களை நேற்று முன்தினம் திருடி சென்றுள்ளனர். இது குறித்து வெங்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் 30 ஆயிரம் ரூபாய் பணமும், பொய்யூர் கிராமத்தில் சாமிநாதன் என்பவரது வீட்டில் ஒரு பவுன் மோதிரம், 5 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கீழப்பழுவூர் மற்றும் கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் வெவ்வேறு மூன்று இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.