தமிழக அரசு, கர்ப்பிணி பெண்களின் நலனுக்காக 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு மூன்று தவணைகளாக ரூ. 14,000 நிதியுதவியும், ரூ. 4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9489048910 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.