வீரபோகம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி அனிதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, ரவி, முருகேசன் ஆகியோர், அனிதா டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 189 மதிப்பெண் எடுத்திருந்த நிலையில், தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் இணையதளப் பட்டியலில் பெயர் சேர்க்க பணம் தேவை என்றும் கூறி, அனிதாவின் தந்தை கருணாமூர்த்தியிடம் இருந்து ரூ.5 லட்சம் இரு தவணைகளாக பெற்றுள்ளனர். பின்னர், பெரம்பலூர் மாவட்ட பொதுப் பணித் துறையில் தட்டச்சர் பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். இது போலியானது எனத் தெரியவந்ததும், பணம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.