அரியலூர் நகரில் சின்னகடை தெருவில் உள்ள பாலபிரச்சன்ன சக்தி விநாயகர் ஆலயத்தில், கார்த்திகை மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையான இன்று, ஶ்ரீ காசி விஸ்வநாதருக்கு 108 வலம்புரி சங்குகளைக் கொண்டு சங்காபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அரியலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.