தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை, 09.11.2025 அன்று அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரியலூர் மாவட்ட காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.