நீர்த்தேக்க தொட்டியை அகற்றக் கோரி சேவை மையம் முற்றுகை

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட நாகம்பந்தல் ஊராட்சியில் 5 மற்றும் 6-வது வார்டுகளில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 6-வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 40 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதால் சிதலமடைந்த நிலையில் உள்ளது. சுத்தம் செய்ய முடியாத சூழலில் கசடு, துரு கலந்த குடிநீர் வழங்கப்படுவதாகக் கூறி, புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித் தரக் கோரி பொதுமக்கள் சேவை மைய கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி