பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள கோயில் சிலையை உடைத்த மனநலன் பாதிக்கப்பட்ட
விஜய் ஆனந்த் (40) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அரியலூா் மாவட்டம், சாத்தம்பாடி அருகேயுள்ள முத்துவாஞ்சேரியைச் சோ்ந்த இவா், மது போதையில் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளாா். பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த நிலையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.