அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரியலூர் மாவட்ட காவல் பிரிவு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் மீட்பு பிரிவின் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். பேரணியில் இணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி, காவல் உதவி ஆய்வாளர்கள் ரவி, சுமதி, மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.