அரியலூர் நகரின் மேற்கு பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு இன்று அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.