அரியலூர் மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக மாநில அளவில் விரக்களம் என்ற விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கின. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் டார்ச் ஏற்றி தொடங்கி வைத்தார். இது மாநில அளவிலான மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான போட்டியாகும்.