அரியலூர்: அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

50பார்த்தது
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ தேர்வுகள் வெளிவந்தவுடன் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. 

அரசு கலைக் கல்லூரிகளில் இன்றும் நாளையும், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் உள்ளிட்ட சிறப்பு உள்ளீட்டு பிரிவில் பதிவு செய்த மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. மதிப்பெண் ரேங்க் வரிசைப்படி அனைத்து வகுப்பினருக்கும் கலந்தாய்வு நடத்தி, அதன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

மாணவர்களின் கல்விச் சான்றுகள், சாதி சான்று, முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் நேரடியாக சரிபார்க்கப்பட்டு, பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சேர்க்கைக்கான அத்தாட்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வருகின்ற நாலாம் தேதி முதல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி