598 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம்: மாணவி ரிக்ஷிதாவுக்கு

0பார்த்தது
598 மதிப்பெண் பெற்று மாநில முதலிடம்: மாணவி ரிக்ஷிதாவுக்கு
அரியலூர் மாவட்டம் தெத்தேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ரிக்ஷிதா, 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஆசிரியர் தமிழரசன் - சத்யவதி தம்பதியினரின் மகளும், கொடுக்கூர் பாலசந்திரன் அவர்களின் பேத்தியுமாவார். இந்தச் சாதனைக்காக, ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. வைத்தி, மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைப் பாராட்டி, ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கி வாழ்த்தினார்.