தமிழக ஆசிரியர் கூட்டணி சிறப்பு செயற்குழு கூட்டம் அரியலூரில் மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய ஆசிரியர் சங்க கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.