அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அண்ணா நகரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கடந்த 06.11.2025 அன்று கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் 23.11.2025 அன்று மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து, அதற்கான ஆணைப் பிரதியை திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் காவல்துறையினர் வழங்கினர்.