அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சிறுமி சர்வானிகா இந்தியா சார்பில் ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் நடைபெற்ற மாபெரும் FIDE RATED OPEN சதுரங்க போட்டியில் விளையாடினார். போட்டிகளில் 2049 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அண்டர் 9, 10, 11, 12 பெண்கள் பிரிவில் இந்தியாவில் முதலிடம் பெற்ற சிறுமி சர்வானிக்காவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.