தென்னூர் புனித லூர்து அன்னை ஆலயத்தின் 180 ஆம் ஆண்டு பெருவிழா, இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று காலை கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மை குரு ஜோசப் கென்னடி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 10 ஆம் தேதி கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. புனித லூர்து அன்னையின் தேர் பவனியும் நடந்தது.