அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே காங்கேயன் குறிச்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், காப்பு கட்டி விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காளியாட்டம் நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற தீமிதி விழாவில் குழந்தைகள் சுமந்தபடியும் பக்தர்கள் பங்கேற்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.