அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே, அதிக வட்டி தருவதாக கூறி 30-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2.80 கோடி பணம் மற்றும் 19½ பவுன் நகை மோசடி செய்த வழக்கில் செல்வராணி, கருப்பையா ஆகிய இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.