அரியலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 இருசக்கர வாகனங்கள் பிப். 12 காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலமாக விற்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ரூ. 1000 முன்பணம் செலுத்தி, ஆதார் நகலுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் காவல் கட்டுப்பாட்டு அறை 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.