அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் பொதுவெளியில் மேடை அமைத்து வினோத் என்பவர் கையில் பிளேடு வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இதனை அறிந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடையார்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வினோத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.