அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் 18 நாட்கள் நடைபெற்ற மகாபாரத விழாவின் நிறைவாக தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிகுண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுடன் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்.