மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியின் திருவுருவப்படத்தை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி. திறந்து வைத்து குடும்பத்திற்கு நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.
அரியலூர் மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தலைவர் மணிவண்ணன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் காலமானார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக தமிழ்நாடு தென்னிந்திய புத்த விகார் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வந்திருந்து கட்சி நிர்வாகி மறைந்த மணிவண்ணனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள் மைக்கேல் தாஸ், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், திருவள்ளூர் பிரேம், செ. க. குமார், வழக்கறிஞர் அன்புதாசன், வாசு, சக்தி, சுப்பிரமணியன், வீரமுத்து உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்