அரியலூர் அண்ணா சிலை அருகே கிராம உதவியாளர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் கிராம உதவியாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.