அரியலூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் இன்று (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு. பொ. இரத்தினசாமி, இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு, வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாகும்.