அரியலூர் மாவட்ட மக்கள் தொடர்புத்துறை சார்பாக, தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி த. பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிச்சனூர் ஊராட்சியில் 26/11/25 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் தொடங்கி வைத்த நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், கலைஞர் கனவு இல்லம், விடியல் பயணம், கள ஆய்வில் முதல்வர், வேலை வாய்ப்பு முகாம்கள், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, தாயுமாணவர் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.