அரியலூர் பேருந்து நிலையம் அருகே உலக காசநோய் விழிப்புணர்வு வார பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்று, காசநோய் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.