அரியலூர்: தடை செய்யப்பட்ட ஹார்ன்கள் பறிமுதல்

0பார்த்தது
அரியலூர்: தடை செய்யப்பட்ட ஹார்ன்கள் பறிமுதல்
அரியலூா் மாவட்டத்தில், சட்ட ஒழுங்கு காவல்துறையினா் சனிக்கிழமை இரவு சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். இதன் போது, 66 டிராக்டா்களுக்கு சாலை விபத்தை தடுக்கும் பொருட்டு சிவப்பு ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டன. மேலும், பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட 49 ஏா் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தணிக்கையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையேற்றாா். போக்குவரத்து காவல்துறை அலுவலா்களும் இதில் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி