அரியலூர்: தொழிலாளி மீது தாக்குதல் உறவினர்கள் சாலை மறியல்

773பார்த்தது
ஜெயங்கொண்டம் அருகே சிவக்குமார் (24) என்பவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களை உடனடியாக கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவின்போது, ராஜதுரை (17), விஜய் (22) ஆகிய இரு இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டபோது, சிவக்குமார் அவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு கோபமடைந்த இளைஞர்கள் சிவக்குமாரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், உறவினர்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி