அரியலூர்: காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

0பார்த்தது
அரியலூர்: காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கூட்டரங்கில் 03.06.2026 அன்று காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., புலனாய்வு குறித்து சிறப்புரை ஆற்றினார். சட்டம் & ஒழுங்கு தலைமை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை 27 பேருக்கு குற்ற சம்பவம் நடைபெற்ற இடத்தை புலனாய்வு செய்தல், தடயங்களை சேகரித்தல், வழக்கு பதிவு செய்தல் குறித்து வாரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் திரு.செந்தில்மாறன் தலைமையில் விபத்து போன்ற மாதிரி பயிற்சிகளும் நடத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி