அரியலூர்: மளிகை கடையில் புகையிலை.. அதிரடி கைது

0பார்த்தது
அரியலூர்: மளிகை கடையில் புகையிலை.. அதிரடி கைது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைகுடம் கிராமத்தில் நடராஜன் என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (ஹான்ஸ்) சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தா.பழூர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 18.9 கிலோகிராம் எடையுள்ள 63 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி