அரியலூர்: கஞ்சா போதையில் இளைஞர் அடித்துக்கொலையா? பரபரப்பு

1607பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தைலமரத் தோப்பில் இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் ஸ்டேட் பேங்க் காலனித் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (17) என்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் கஞ்சா புதைக்கப்பட்டிருந்ததும், கஞ்சா போதையினால் பிரச்சனை நிகழ்ந்திருக்க கூடும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி