அரியலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர். அஸ்தினாபுரத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியின் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளி மாணவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் கேட்டறிந்தார்.