அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள விழப்பள்ளம் கிராமத்தில் அரியலூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் மகன் புதுநன்மை விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து கலந்துகொண்டு மாணவனை வாழ்த்தி ஆசீர்வதித்தார். இதில் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கிராமத்தினர் பலர் கலந்துகொண்டனர்.