அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் ரங்கமுருகன் தலைமையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் விஜய் அறிவழகன், இளம் பேச்சாளர் சாருதீன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில், ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.