ஜெயங்கொண்டம்: அரசு கலைக் கல்லூரி; 86 பேர் வேலைவாய்ப்பில் தேர்வு

65பார்த்தது
ஜெயங்கொண்டம்: அரசு கலைக் கல்லூரி; 86 பேர் வேலைவாய்ப்பில் தேர்வு
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக நேர்காணல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025 கல்வியாண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடைபெற்றது. 

தனியார் நிறுவனமான சென்னை, புரூடில் இன்டெக்கரேடேட் சர்வீஸ் சொலுசன் நிறுவனம் வளாக நேர்காணலை நடத்தியது. இதில் 164 மாணவ-மாணவிகள் பங்கு பெற்றனர். இறுதியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 86 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அந்நிறுவனத்தைச் சார்ந்த  விநோதினி, சுரேஷ் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் இரமேஷ் ஆகியோர் அழைப்புக் கடிதத்தை வழங்கினர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு புல ஒருங்கிணைப்பாளர் முனைவர்இராசமூர்த்தி, இணைப்பேராசிரியர், இயற்பியல் துறை ஏற்பாடு செய்திருந்தார். கணித துறை இணைப்பேராசிரியர் முனைவர்  நந்தகுமார் அவர்கள் உடன் உள்ளார்.

தொடர்புடைய செய்தி