ஜெயங்கொண்டம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தில் வசிக்கும் 85 வயது விவசாயி சின்னத்தம்பி 2 நாட்களாக காணாமல் போன நிலையில், இன்று காலை நள்ளுக்குளம் ஏரியில் அவரது உடல் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா என்பது குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.