அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள நூறாண்டு பழமையான செல்லியம்மன் கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆகம விதிப்படி புதிதாக கட்டப்பட்ட கோவிலில், நான்கு கால யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.